Tuesday, July 30, 2013

சொன்னா புரியாது .. படம் நல்லா தான் புரிஞ்சுது..



      Volkswagen கார் வாங்க வேண்டும் என்ற கனவுடன் வாழும் இளைஞனின் கதை. இந்த மாதிரி ஸ்டோரி லைன் இன்று வரைக்கும் தமிழ் சினிமாவில் வந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. டப்பிங் படங்களுக்கு குரல் குடுப்பவராக மிர்ச்சி சிவா. அவருடைய நண்பன் பிளேட் சங்கர். தமிழ்படம் எடுத்த அமுதனின் உதவியாளராக இருந்த கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கம் முதல் படம்திருமணம் என்றாலே தலை தெறிக்க ஓடும் சிவா, தன் தாயின் பல்வேறு மிரட்டல்களுக்கு பிறகு வசுந்த்ராவுடனான திருமணதிற்கு சம்மதிக்கிறார். வசுந்த்ரவுக்கும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்பதை தெரிந்துகொண்டு இருவரும் திருமணத்தை நிறுத்துகிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பது 2nd half.

   சிவா மொக்கை காமெடிக்கு பெயர் போனவர் என்று நமக்கும் தெரியும். அதை இந்த படத்தில் நிறைவாக செய்து இருக்கிறார். சிவாவின் என்ட்ரிக்கு அரங்கம் அதிர்கிறது. அவர் பார்ட்டியில் பாடம் ஹிந்தி பாடல் "ரோசா ஹேய் தில் மெய்ன் ரோசா ஹேய், ஹேய் மேரா பிரேக்பாஸ்ட் தோசா ஹேய் " சூப்பர்.படம் முழுவதும் சிவாவின் காமெடி ரசிக்க வைக்கிறது. அவர் வைத்திருக்கும் மஹாபரதம்  இப்போது என் மொபைலில் ஒலிக்கிறது. ஜெட்லி OMR- இல் நிலம் வாங்குவதாக சிவா டப்பிங் செய்யும் காட்சியில் இயக்குனருக்கு கை தட்டலாம். சிவாவிற்கு நடிக்கத் தெரியுமா?தெரியாதா? என்று வாதாடி வருபவர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து பிறகு முடிவுக்கு வரலாம். தப்பு தப்பாக ஹிந்தி பேசுவதும்தண்ணி அடித்துவிட்டு கொய்யா இலையை தின்பதும்கிருஷ்ணருக்கு மாடு நண்பன்னு உனக்கு தெரியுமா என்று கேட்பதுமாக படம் முழுவதும் சிவா செய்யும் லூட்டிகள் பிரமாதம்வசுந்தரா திறமையை நிரூபிக்க அதிக காட்சிகள் இல்லை என்றாலும், தனது பங்களிப்பை திறம்பட கொடுத்து இருக்கிறார். மனோ பாலா திருமண ஏற்பாடு செய்பவராக வந்து நம்மை சிரிக்க வைக்கிறார்சிவாவின் அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன் உட்பட அனைவரும் தங்கள் பங்கை சரியாக அளித்து இருக்கிறார்கள்இந்த மாதிரியான படத்திற்கு என்ன திரைக்கதைத் தேவையோ, அதைச் சொதப்பாமல் செய்து இருக்கிறார் இயக்குனர். காட்சிகளில் தொய்வு இருந்தாலும், நம்மை சலிப்புக்கொட்டச் செய்யாமல் கதை நகர்கிறது.திருமணத்தை நிறுத்த சிவா வசுந்தராவின் தந்தையிடும் சொல்லும் காரணம் உட்பட பல இடங்களில் வசனம் நன்றுஒளிப்பதிவில் பிரமாண்டமாக காண்பிப்பதற்கு அதிகம் இல்லை என்றாலும் சரவணன் சிறப்பாக செய்து இருக்கிறார் என்றுகூட சொல்லலாம். பாடல்களில் கவனம் செலுத்தி சிறப்பான பாடல்களைத் தந்து இருந்தால், திரையருங்ககில் இன்னும் கொஞ்சம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து இருக்கும். சிவாவின் மொக்கை காமெடிகளை ரசித்து பழகியவர்களுக்கு இந்தப் படம் முழுநீள விருந்து.


No comments:

Post a Comment

Chat Box