Wednesday, June 12, 2019

சோழப் பேரினம்

இந்த உலகின் ஒரு பெரும்பகுதியை 394 ஆண்டுகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாபெரும் சக்கரவர்த்திகளின் கூடாரம் சோழப் பேரினம். குடகு முதல் காம்போஜம் வரை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து புலிக்கொடி ஆட்சி செய்தவர்கள்.

அவர்களின் நிர்வாகத் திறன், உள்ளாட்சி முறை, உள்ளாட்சிகளுக்கு கற்றுதரப்ட்ட தற்சார்பு வாழ்வியல் மற்றும் தற்சாற்பு பொருளாதாரம், நிதி மேலாண்மைக் கொள்கைகள்,  அரசு மற்றும் அரசியல் கொள்கைகள், உலகின் மாபெரும் படையின் போர் உத்திகள் - பயிற்சிகள், நீர் மேலாண்மை, உலகின் தொடக்க கால கப்பற்படையை கட்டிய முறை, அனைத்து மக்களுக்கான நலத் திட்டங்கள், அன்றுவரை வழக்கில் இருந்திராத  நில அளவியல் முறைகள், அவர்களின் கட்டிட முறைகள்; அதன்பொருட்டு இன்றுவரை விளக்கப்படாத பல்வேறு மர்மங்கள், திருமாந்தர்களுக்கு(திருநங்கைகள்)
அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அரசியலில் பெண்களுக்கும் கொ
டுக்கப்பட்ட முன்னுரிமை, ஒற்றர்படை வல்லமை
(அக்காலத்திலேயே பல்வேறு ராஜியங்களில் குடியேறி ஒற்றர்களாக சோழர்களின்  கட்டளைக்காக 30-40 ஆண்டுகள்  காத்திருந்த ஸ்லீப்பர் செல்கள் வரலாறு கூட உண்டு), தொழிற்நுட்பம் இல்லாத நாட்களிலேயே தங்கு தடையற்ற தகவல் பரிமாற்றம், சிறிதளவு கூட குழப்பமில்லாத படிநிலை நெறிமுறைகள் (Hierarchical Protocols), வரலாற்றை ஆவணப்படுத்திய  முறை,
தொழிலாளர்களுக்கு செய்யப்பட மரியாதை, தொழில்முனைவோருக்கும் வானிபர்களுக்கும்  கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்; அவர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள், கிழக்காசிய தீபகற்ப மற்றும் தீவு அரசுகளுடன் ஏற்படுத்தப்பட்டிருந்த வெளியுறவு உடன்படிக்கைகள் என ஒரு அரசு  உலகின் தலைசிறந்த வல்லரசாக இருந்திருப்பதற்கான அனைத்து சிறப்புகளையும் கொண்டிருந்தது. 


சோழர்களின் சிறப்புகள் அனைத்துமே உலக வரலாற்று ஆய்வார்களின் புருவங்களை உயர்த்தும் ரகமாகவே உள்ளது. இத்துனை சிறப்புமிக்க சோழ பெருமைகளை ஓரிரு நாட்களில், ஒன்றிரண்டு புத்தகங்களை படித்துவிட்டு கருத்து சொல்லிவிட முடியுமா என்ன. என்னுடைய எட்டாம் வகுப்பில் சோழர்களை பற்றி தேடத் தொங்கினேன். 17 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவர்களைப் பற்றி இன்றுவரை எவ்வளவு தெரிந்து கொண்டேன் என்பதும், எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்பதும்  புலப்படாத பெரும்புதிராகவே உள்ளது. சோழ தேச வரலாறு ஆழ்கடல் போன்றது. அவ்வளவு எளிதில் மூழ்கி முத்தெடுப்பதென்பது மிக சிரமம்.

1 comment:

Chat Box