Wednesday, June 12, 2019

சோழப் பேரினம்

இந்த உலகின் ஒரு பெரும்பகுதியை 394 ஆண்டுகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாபெரும் சக்கரவர்த்திகளின் கூடாரம் சோழப் பேரினம். குடகு முதல் காம்போஜம் வரை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து புலிக்கொடி ஆட்சி செய்தவர்கள்.

அவர்களின் நிர்வாகத் திறன், உள்ளாட்சி முறை, உள்ளாட்சிகளுக்கு கற்றுதரப்ட்ட தற்சார்பு வாழ்வியல் மற்றும் தற்சாற்பு பொருளாதாரம், நிதி மேலாண்மைக் கொள்கைகள்,  அரசு மற்றும் அரசியல் கொள்கைகள், உலகின் மாபெரும் படையின் போர் உத்திகள் - பயிற்சிகள், நீர் மேலாண்மை, உலகின் தொடக்க கால கப்பற்படையை கட்டிய முறை, அனைத்து மக்களுக்கான நலத் திட்டங்கள், அன்றுவரை வழக்கில் இருந்திராத  நில அளவியல் முறைகள், அவர்களின் கட்டிட முறைகள்; அதன்பொருட்டு இன்றுவரை விளக்கப்படாத பல்வேறு மர்மங்கள், திருமாந்தர்களுக்கு(திருநங்கைகள்)
அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அரசியலில் பெண்களுக்கும் கொ
டுக்கப்பட்ட முன்னுரிமை, ஒற்றர்படை வல்லமை
(அக்காலத்திலேயே பல்வேறு ராஜியங்களில் குடியேறி ஒற்றர்களாக சோழர்களின்  கட்டளைக்காக 30-40 ஆண்டுகள்  காத்திருந்த ஸ்லீப்பர் செல்கள் வரலாறு கூட உண்டு), தொழிற்நுட்பம் இல்லாத நாட்களிலேயே தங்கு தடையற்ற தகவல் பரிமாற்றம், சிறிதளவு கூட குழப்பமில்லாத படிநிலை நெறிமுறைகள் (Hierarchical Protocols), வரலாற்றை ஆவணப்படுத்திய  முறை,
தொழிலாளர்களுக்கு செய்யப்பட மரியாதை, தொழில்முனைவோருக்கும் வானிபர்களுக்கும்  கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்; அவர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள், கிழக்காசிய தீபகற்ப மற்றும் தீவு அரசுகளுடன் ஏற்படுத்தப்பட்டிருந்த வெளியுறவு உடன்படிக்கைகள் என ஒரு அரசு  உலகின் தலைசிறந்த வல்லரசாக இருந்திருப்பதற்கான அனைத்து சிறப்புகளையும் கொண்டிருந்தது. 


சோழர்களின் சிறப்புகள் அனைத்துமே உலக வரலாற்று ஆய்வார்களின் புருவங்களை உயர்த்தும் ரகமாகவே உள்ளது. இத்துனை சிறப்புமிக்க சோழ பெருமைகளை ஓரிரு நாட்களில், ஒன்றிரண்டு புத்தகங்களை படித்துவிட்டு கருத்து சொல்லிவிட முடியுமா என்ன. என்னுடைய எட்டாம் வகுப்பில் சோழர்களை பற்றி தேடத் தொங்கினேன். 17 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவர்களைப் பற்றி இன்றுவரை எவ்வளவு தெரிந்து கொண்டேன் என்பதும், எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்பதும்  புலப்படாத பெரும்புதிராகவே உள்ளது. சோழ தேச வரலாறு ஆழ்கடல் போன்றது. அவ்வளவு எளிதில் மூழ்கி முத்தெடுப்பதென்பது மிக சிரமம்.

Monday, March 18, 2019

என் ஒப்பன் கண்ணப்பன்

கர்நாடக மாநிலம் ஹம்பி நகர் தூண்களில்  உள்ள  கண்ணப்பர் 
             படம்: நண்பர் அருண்காளி ராஜா 

விதியின் படி நாம் விரும்பும் ஒரு சில விஷயங்கள் எதாவது ஒரு குறியீட்டின் மூலம் நம்முடன் இணைக்கப்பட்டு விடுகின்றன. இப்படி இணைக்கப்படும் விஷயங்கள் மீது நமக்கான பிடிப்பு தீராக் காதலாகவே மாறிவிடுகின்றது.

மகாபாரத்தில் அர்ஜுனன் சாபம் பெறுதல் : 

           மகாபாரதக் கதைகளை கேட்க தொடங்கியது முதல் எனக்கு பிடித்த பாத்திரம் அர்ஜுனன். மாவீரன். கர்ம வீரன். அண்ணன் சொல்லுக்கு கட்டுப்படும் தனயன். எல்லாவற்றிற்கும் மேலாக மாபெரும் சிவ நேசன். பிரமரால் உருவாக்கப்பட்ட காண்டீபம் என்னும் வில்லை, அர்ஜுனன் ஈசன் பால் கொண்ட பக்தியால் அவனுக்கு அதை கிடைக்க செய்தார் ஈசன். மகாபாரதப் போரை வெல்ல பாசுபதாஸ்திரம் மிக அவசியம் என்பதை உணர்த்த அர்ஜுனன், அதை பெற சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களத்தில் சிவனை பிரதிஸ்ட்டை செய்து  தவம் புரிகிறான். அப்போது காட்டுப் பன்றி ஒன்று அவன் தவத்தில் இடையூறு செய்யவே, நானெய்தி அந்த பன்றியை கொள்கிறான். இறந்த பன்றியின் அருகில் சென்று பார்க்கும் போது இன்னொரு வேடனின் அம்பும் அந்த பன்றியை கொன்றிருந்தது. இருவருக்கும் வாகு வாதம், யார் அம்பு முதலில் பன்றி மீதேறியது என்பதில். அப்போது அர்ஜுனன் அந்த வேடுவனின் குலத்தை சொல்லி திட்டிவிடுகிறான். அடுத்த பிறவியில் அர்ஜுனன் வேடுவனாக பிறக்க சபிக்கிறான்.


கண்ணப்பர் சிவன் பால் கொண்ட காதல் :

சென்னை அருகே திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக் கோயில் தூணில் கண்ணப்பர் .


     சிவ தொண்டாற்றிய 63 நாயன்மார்களின் கதைகளை சிறு வயதில் பெரியவர்கள் கூற கேட்டு இருப்போம். ஒவ்வொரும் தங்களால் இயன்ற அளவு ஈசன் பால் கொண்ட பக்தியை செலுத்தியுள்ளனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர், மெய்கண்டார், இசைஞானியர், திருநாளைப் போவார் என 63 அறுபத்து மூவரின் பக்தியும் அளவிட முடியாத ஒன்று. அவர்களில் சிறு வயது முதலே என்னைக் கவர்ந்தவர் கண்ணப்பர்.  கண்ணப்பர் கல்வி பயின்றது இல்லை. வேதங்கள் படிக்கவில்லை. சிவ வழிபாட்டு முறைகளை அறிந்தவரில்லை. அவருக்கு தெரிந்தவை எல்லாம், அவர் வசிக்கும் காட்டில் ஈசன் இருக்கிறார். தினமும் வேட்டையாடும் பொருளை ஈசனுக்கு அர்ப்பணித்து உண்ணும் பழக்கம் இருந்தது. அந்த அளவில் தான் ஈசன் மீது பற்று ஏற்பட்டு இருந்தது. ஒரு நாள் லிங்கமாய் நின்ற ஈசனின் கண்ணில் குருதி வடிவதை பார்த்து தாளாமல் தன் கண்ணயே ஈசனைக்கு பரிசாக அளித்த பக்திமான்.

"கண்ணப்பன் ஒப்பதோர்
    அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
    என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
    வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
    சென்றூதாய் கோத்தும்பீ "

என்று எட்டாம் திருமுறையில் மாணிக்கவாசகப் பெருமானாலேயே வியந்து பாடப் பெற்று இருக்கிறார் கண்ணப்பர். கண்ணப்பர்  ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே பிறந்தவர் என்றாலும் ஆந்திர, கர்நாடக, தமிழ்நாடு மாநில கோயில்களில் அவரின் சிறப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. 

நம்ம கதை :

அணைத்து சிவ ஆலயங்களிலும் 63 நாயன்மார்களின் சிலைகள் வைக்கப்பட்டு, அவர்களின் பிறப்பு விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும் 


திருவேட்களத்தில் அர்ஜுனன் பெற்ற சாபத்தின் பெயரால், அடுத்த பிறவியில் அவன் பெற்ற பிறப்பே கண்ணப்பர். என்ன தான் சாபம் பெற்றாலும் தன் பிள்ளையை விட்டுக் கொடுத்து விடுவாரா அப்பன்? அடுத்த பிறவியில் தனக்கு கண் கொடுக்கும் பெரும் பேரு அர்ஜுனனுக்கு அளித்தார் ஈசன். மகாபாரதக் கதையில் என் இஷ்ட பாத்திரம் அர்ஜுனன், நாயன்மார்களில் இஸ்டமனாவர் கண்ணப்பர். இருவரும் பெரும் சிவ தொண்டர்கள். இவர்களுக்கு இடையேயான தொடர்பு சமீபத்தில் தான் அறிய முடிந்தது. மேலும் கண்ணப்பர் நான் பிறந்த அதே மிருகசிரீஷ நட்டச்த்திரத்தில் பிறந்தவர். இந்த அளவிலான ஒற்றுமையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் நான் அறிந்து கொண்டேன். அப்பனுக்கு தெரியாதா பிள்ளைகளை எங்கே, எப்படி, எவ்வாறு இணைத்துக் கொள்ள வேண்டும் என்று. அவன் அன்றி ஒரு அணுவும் இல்லை. பிறகு எங்கே அசைவது. திருச்சிற்றம்பலம். 


Tuesday, February 26, 2019

சின்னபரூர் ஸ்ரீ உமாதேவி உடன் அமர் ஸ்ரீ நடன புரீஸ்வரர்


கோயில்கள் கட்டி இருக்கிறார்கள் ? எங்கே கட்டி இருக்கிறார்கள்? இன்று நாம் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோமே, அதிலிருந்து 
பல மைல்கள் தள்ளி, உள்கிராமங்கிளில் கட்டி இருக்கிறார்கள். அந்த கோயில்களை சுற்றி மக்களை குடியமர்த்தி  இருக்கிறார்கள்.  அந்த கிராமங்களில் ஏன் காட்டினார்கள்? அப்படி அங்கே என்ன இருந்திருக்கக்கூடும்? ஒரு வேளை, ஒரு காலத்தில் அந்த கோயில்கள் அமைந்திருக்கும் கிராமங்களை இணைக்கும் சாலைகள் தான் முக்கிய வழித்தடங்களாக இருந்தனவா ? 


     கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் அருகே உள்ளது சின்ன பரூர் கிராமம். விருத்தாசலம் நகரில் இருந்து 12 கிலோமீட்டர். அந்த கிராமத்திலிருந்து   சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 16 கிலோமீட்டர்.  அக்கிராமத்தில் ஸ்ரீ உமாதேவி உடன் அமர் ஸ்ரீ நடன புரீஸ்வரர் திருக்கோயில் இருந்துள்ளது. கருங்கல் கோயிலாக இருந்திருக்க கூடும். குறைந்த பட்சம் ஒரு ஏக்கரில் அமைந்துள்ளது. கருங்கல் காம்பவுண்டு சுவர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அருகில் சிறு குளம் இருந்து இருக்கிறது. அந்த கோயில் பாழடைந்த பின்னர் செங்கல்லினால் கோயில் கட்டி இருக்கிறார்கள். அதுவும் சிதலமடைந்துள்ளது. 



தற்போது தகர கொட்டகைக்குள் ஆவுடையாரை தேவி சகிதம் குடும்பத்துடன் குடி  வைத்து உள்ளார்கள். கோயில் கட்டுவதற்கான பணிகள் நடப்பதாக தெரிகிறது. வேறு பணி காரணமாக அவ்வூருக்கு சென்றதால் யாரிடமும் பேச்சு கொடுத்து விவரம் பெற இயலவில்லை. 

  இன்று இறைவனையும், இறைவியையும் கண்டதால் பெரும்பேறு பெற்றேன். விரைவில் முழு தகவல்களுடன். "அந்த ஊருல ஒரு பழைய கோயில் இருக்கு, முடிஞ்சா அத போய் பாருங்க", என்று ஒரு வருடத்திற்கு முன் நமக்கு தகவல் தெரிவித்த நண்பர் அன்பு அரசன் அவர்களுக்கு நன்றி.







Chat Box