"என்ன மாப்ள எப்படி இருக்கீங்க ", "பங்காளி சௌக்கியமா" இது தான் சென்னையில் இருந்து ஊருக்குக்கு சென்றால் நம் காதில் விழும் வார்த்தைகள். இந்த நல விசாரணையில் அன்பும் அக்கறையும் வெளிப்படும்... எந்த எதிர்ப்பார்ப்பும் இருக்காது. அது தான் கிராமம். மாசில்லாத சுத்தமான காற்று, ஆடு, மாடு, கோழி, மரங்கள், வயல்வெளிகள், குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், மெத்தை வீடுகள் என்று இயற்க்கை எழில் பூங்காக்கள் நமது கிராமங்கள். இரவு நேரங்களில் தெருக்களில் கட்டில் போட்டு உறக்கம், காலையில் வயலுக்கு நடைப் பயணம், மாலையில் குடும்பத்துடன் சில மணிகள் என்று தான் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது நமது கிராமங்கள்.
இத்தகைய வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இன்று நாம் சென்னையின் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறோம். சொந்த ஊரில் வேலை கிடைத்து, காலையில் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பி அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என்று மகிழ்ச்சியாய் வாழ்பவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். அது போன்று வாழ்க்கை அமைய கொடுத்து வைத்து இருக்க வேண்டும். விடுமுறை நாட்கள்களில் ஊருக்கு செல்லும் போது எனது உறவினர்களை பார்க்கும் போதெல்லாம் இந்த உணர்வை அவர்களிடம் வெளிப்படுத்தியதுண்டு.
தமிழக மக்கள் தொகையான 8.75 கோடி மக்களில் 1 கோடி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்கிறார்கள். புறநகர் மக்கள் தொகையை சேர்த்தால் கிட்டத்தட்ட 2 கோடி வாழ்வதாக கருதப்படுகிறது. வெளி ஊர்களிலிருந்து சென்னைக்கு குடி ஏறியவர்கள் சென்னையின் மக்களை தொகையில் 36%. 2011-ல் சென்னையின் மக்கள் தொகையாக இருந்த 70 லட்சத்தை விட இது பன்மடங்கு உயர்வு. இந்த அளவில் இருக்கிறது மக்களின் இடம்பெயர்வு. எனது சொந்த மாவட்டமான கடலூரில் ஒரு சதுர கிலோமீட்டரில் 702 பேர் வாழ்கின்றனர். ஆனால் சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டரில் 26,553 மக்கள் வாழ்கின்றனர்.இது கடலூர் மாவட்டத்தை விட 3670% அதிகம். அதாவது கடலூர் மாவட்டத்தில் ஒரு நபர் வாழக் கூடிய பரப்பளவில் சென்னையில் 37 பேர் வாழ்கின்றனர். பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து ஊருக்கு செல்வது எவ்வளவு கடினம் என்பது நமக்கு தெரியும். அணைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் திக்குமுக்காடிபோகும்.
ஏன் இந்த இடம் பெயர்வு?
தினமும் ஊர்களில் இருந்து சென்னைக்கு பலர் வந்த வண்ணம் தான் உள்ளனர். காரணம். நமது மாவட்டங்களில் தரமான கல்வி கிடைக்க வழியின்மை, வேலை வாய்ப்பின்மை, நிலையான வருமானம் ஈட்ட முடியாமை.நமது கிராமங்களின் வாழ்வாதாரம் விவசாயம். நம் முன்னோர்கள் அரசு அலுவலகங்களிலோ, சாப்ட்வேர் கம்பனியிலோ சம்பாதித்து நம்மை படிக்க வைக்கவில்லை. விவசாயம் செய்தார்கள். அது தான் நம் குடும்பங்களுக்கு படி அளந்தது. விவசாயம் பெரும் லாபம் தரும் ஒன்றாக இருந்தது. அதன் காரணமாக நமது முன்னோர்கள் இடப்பெறவு பற்றி சிந்தித்துகூட இருக்கமாட்டார்கள். இன்று மழை பொய்த்து, நிலத்தடி நீர் வற்றி விவசாயம் செல்லும் திசை சரி இல்லைதான் என்றாலும் அது வேறு கதை. இப்படியாக கல்லூரி படிப்பு, வேலை நிமித்தம் என்று சென்னை வந்த நாம் இங்கேயே தங்கிவிடுகிறோம்.
என் எதிர் வீட்டு மாமா ஒரு விவசாயி. அவர் வயலில் வேலை இல்லாச் சமயங்களில் பிறர் வயல்களில் கூலி வேலைக்கும் செல்வார். ஒரு பையன், இரண்டு பெண் குழந்தைகள். தான் என்னதான் கஷ்ட்டப்பட்டாலும் தன் பையனை பொறியியல் படிக்க வைத்தார். அவன் இன்று படிப்பு முடித்து கோவையில் வேளையில் இருக்கிறான். நமது கிராமத்து பெரியோர்கள் அடிக்கடி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் "நான்தான் படிக்காம கஷ்டப்பட்டது இருக்கேன். நீயாவது படிச்சு நல்ல வேலைக்கு போய்ட்டு ராசா", என்றுதான். இப்படி நம் பெரியோர்கள் சொல்லும் போது கஷ்டமாக இருந்தாலும் அதுவும் உன்மையாக தான் பட்டது. இன்று வேலைக்கு கோவையில் இருக்கும் அந்த பையனால் அவ்வளவு எளிதாக ஊருக்கு இடம்பெயர முடியாது. நம்மை எல்லாம் படித்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று நமது முன்னோர்கள் எண்ணினார்களே தவிர விவசாயம் செய்ய ஊக்குவிக்கவில்லை. இப்படி கிராமத்திலிருந்து நகரங்களுக்கு படை எடுக்கும் நாம் இங்கே இருக்கும் சோக போகங்களில் திளைத்து சொந்த மண்ணை மறந்துவிடுகிறோம். இப்படியாக கிராமங்கள் வார இறுதியில் நாம் சென்று வரும் farm house போல ஆகிவிட்டது.
கிராமத்து உறவுகள்...
கிராமங்கள் அப்படி இல்லை. ஊர் முழுக்க நமது சொந்தங்கள் தான். பள்ளி அல்லது கல்லூரி கட் அடித்துவிட்டு சினிமாவிற்க்கோ, ஊர் சுற்றவோ சென்றால் மாலை நாம் வீடு வந்து சேரும் முன், அந்த செய்தி வீடு சேர்ந்து, அம்மா துடைப்பத்துடன் வாசலில் நமக்காக வைட் செய்து கொண்டிருப்பார். என் ஊரில் 400 வீடுகள் தான் இருக்கும். ஆனால் அனைவரும் என் சொந்தக்காரர்கள். ஒரு தெருவில் மாமா வீட்டிற்கு நுழைந்து, பக்கத்துக்கு தெருவில் பெரியப்பா வீட்டின் வழியே வெளியே வந்துவிடலாம். "ஊரு முழுக்க நம்ம ஆளுங்கன்னு இருக்கும் போது செம்ம கெத்து தான சார்". எங்கள் கிராமத்தில் எங்கள் பங்காளி வகையறாக்கள் மட்டுமே 13 குடும்பங்கள். குல தெய்வம் கோயிலுக்கு ஏதாவது விஷேஷம் எடுத்தால் அனைத்து குடும்பங்களில் உள்ளவர்களையும் அழைக்க வேண்டும். இது போக இன்னும் மாமன், மச்சான் குடும்பங்கள் வேற. ஆக அனைவரையும் அழைக்காமல் எதுவம் செய்ய முடியாது. செய்யவும் தோணாது. ஏதாவது வீட்டில் ஒரு விஷேஷம் என்றால் கிராமத்த்தில் உள்ள அணைத்து பெண்களும் அங்கு தான் இருப்பார்கள். விஷேஷ வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருப்பார்கள்.
நமக்கு வயசாகிவிட்டது. நம்முடைய அண்ணன் குழந்தைகளுக்கு சித்தப்பாவாகவும், தம்பி குழந்தைகளுக்கு பெரியப்பாவாகவும் ஆகிவிட்டோம். அந்த குழந்தைகள் நம்மை அப்படி அழைக்கும் போதே ஒரு தனி ஆனந்தம் தான். ஆனால் சென்னையில், சித்தப்பா பெரியப்பவை uncle என்று அழைக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.சண்டை சச்சரவுகள் உறவுகளுக்கிடையே இருக்க தான் செய்யும். அதை கவுரவம் பார்க்காமல் கிராமத்தது மக்கள் விரைவில் மறந்து ஒன்றாக வாழத் தொடங்கிவிடுவார்கள். புதுடெல்லியைப் பற்றி சொல்லும் போது கூறுவார்கள் "Everybody is somebody in Delhi". அதுபோலதான் நமது கிராமத்தில் மட்டும் அல்லாது பக்கத்து ஊர்களிலும் நமக்கான அடையாளம் இருக்கும். மக்கள் நம்மை எளிதில் யார் என்று கண்டு கொள்ளுவார்கள். அதையெல்லாம் தொலைத்து விட்டு பிழைப்பிற்க்காக நகரங்களின் தெருக்களில் அடையாளம் இல்லாமல் சுற்றி வருகிறோம்.
தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை கிராமங்கள் காலி ஆகி வருவதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், மக்கள் இருக்கும் பகுதிகளிலேயே தரமான கல்வியும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தர வேண்டியது நமது அரசுகள். இன்றுவரை அதை செய்யத் தவறிவிட்டன. நகராக மயமாக்கல் கொள்கைகள் மூலம் ஒரு பக்கம் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்பில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கிராமங்கள் தேய்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. மாற்றங்கள் ஏதும் நிகழாவிட்டால், கிராமங்களை ஆரோக்யா பால் விளம்பரத்தில் வருவது போல் "நலம். நமது கிராமங்களிலிருந்து", என்று தொலைக்காட்சியில் தான் பார்க்க வேண்டி இருக்கும்.
கிராமத்து உறவுகள்...
கிராமத்தில் விசாலமான வீடுகளில் வசித்த நாம் இன்று நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றோம். சென்னையில் நான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்துக்கு வீட்டில் ஒரு குஜராத்தி இருந்தார். இன்போசிஸில் வேலை. ரொம்பா நாள் கழித்து ஒரு நாள் லிப்ட்டில் சந்திக்கும் போது குஜராத்தில் வேலை கிடைத்து விட்டதாகவும், மீண்டும் ஊருக்கு செல்வதாகவும் சொன்னார். நானும் வாழ்த்து சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். ஆனால் அதற்கப்பறம் அவரை பார்க்கவே இல்லை. ஊருக்கு சென்றிருப்பார் என்று எண்ணி நானும் விட்டுவிட்டேன். ஆனால் ஒரு Facebook -ல் இன்போசிஸில் பிரிவுஉபச்சார நிகழ்வின் படங்களை பதிவேற்றி, "leaving chennai soon", என்று போட்டிருந்தார். அப்போது தான் தெரிந்தது அவர் இன்னும் சென்னையை விட்டு கிளம்பவில்லை என்று. இப்படி பக்கத்து வீட்டில் வசிப்பவர் இருக்கிறாரா இல்லையா என்பதையே நாம் facebook பார்த்து தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது இந்த நகர வாழ்வில்.

நமக்கு வயசாகிவிட்டது. நம்முடைய அண்ணன் குழந்தைகளுக்கு சித்தப்பாவாகவும், தம்பி குழந்தைகளுக்கு பெரியப்பாவாகவும் ஆகிவிட்டோம். அந்த குழந்தைகள் நம்மை அப்படி அழைக்கும் போதே ஒரு தனி ஆனந்தம் தான். ஆனால் சென்னையில், சித்தப்பா பெரியப்பவை uncle என்று அழைக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.சண்டை சச்சரவுகள் உறவுகளுக்கிடையே இருக்க தான் செய்யும். அதை கவுரவம் பார்க்காமல் கிராமத்தது மக்கள் விரைவில் மறந்து ஒன்றாக வாழத் தொடங்கிவிடுவார்கள். புதுடெல்லியைப் பற்றி சொல்லும் போது கூறுவார்கள் "Everybody is somebody in Delhi". அதுபோலதான் நமது கிராமத்தில் மட்டும் அல்லாது பக்கத்து ஊர்களிலும் நமக்கான அடையாளம் இருக்கும். மக்கள் நம்மை எளிதில் யார் என்று கண்டு கொள்ளுவார்கள். அதையெல்லாம் தொலைத்து விட்டு பிழைப்பிற்க்காக நகரங்களின் தெருக்களில் அடையாளம் இல்லாமல் சுற்றி வருகிறோம்.

தொலைந்து போனதை எழுதி தான் ஆற்றிக் கொள்ள வேண்டும்
ReplyDeleteஅருமையான பதிவு சகோ. பலரது மனக்குமுறல், உங்கள் வெளிப்பாடு
ReplyDeleteஅருமை சகோதரா. இதற்கு விளக்குவதற்கு ஒன்றுமில்லை... விளங்கிவிட்டால் வாழ்க்கைக்குத் தேவை வேறொன்றுமில்லை...
ReplyDeleteVery useful information sir.save our village and love agriculture.i need lot of information sir.no body cannot bring use full information,idea,positive motivation.welcome sir thanking you sir
ReplyDelete