விமர்சனம்:
விக்ரம் - வேதா. சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம். நல்ல படம். அற்புதமான கதை அமைப்பு.
புஷ்கர்-காயத்ரியின் இயக்கம் செம. ஷாமின் இசையில் பாடங்கள், பின்னணி இசை கோர்ப்பு பிரமாதம். விக்ரமாக மாதவன்; ஒரு நல்ல comeback. வேதவாக விஜய் சேதுபதி; வழக்கம் போல் அலட்டிக்கொள்ளாமல் நடித்து இருக்கிறார். வசனங்கள் சூப்பர். ஒரு சில இடங்களில் வசனங்கள் தெறி ரகம். இது தான் படத்தின் சுருக்கிய வடிவிலான விமர்சனம்.
நம்ம கதை:
நாம் சிறு வயதில் இருக்கும் போது பல்வேறு திரைப்படங்கள் பார்த்தோ அல்லது நமது தந்தை, அவர்களின் நண்பர்கள் என்று யாரையாவது பார்த்தோ இவரைப்போல் நாம் ஆக வேண்டும் என்று ஒரு சிறு எண்ணம் எழுந்து இருக்கும். அந்த எண்ணம் தான் வாழ்வின் குறிக்கோள் என்று நாம் அப்போது முடிவு செய்து இருக்கமாட்டோம். அதுபோல் ஆக வேண்டும் என்று ஆசையாக இருந்து இருக்கும்; அவ்வளவுதான். வயதாக வயதாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போதும் நாம் இதுவாகவும் ஆகலாம் என்று நமது எண்ணத்தில் மாற்றங்கள் நிகழும். ஆனால் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் நாம் செல்லும் அந்தத் தருணம் தான் நமது வாழ்வின் முக்கிய முடிவினை எடுக்கும் தருணமாக இருக்கின்றது. அப்போது தான் எதிர்காலத்தைப்பற்றிய ஒரு தெளிவு பிறக்கும். எதிகாலத்தில் நாம் என்ன செய்ய போகிறோமோ அதைச் சார்ந்து கல்லூரியில் ஏதேனும் பிரிவு எடுத்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
ஒரு சிலர் பள்ளியில் இருக்கும்போதே தங்களின் எதிர்கால குறிக்கோள்களை நிர்ணயித்து கொள்ளும் அளவிற்கு தெளிவாக உள்ளனர். ஒரு சிலர் மருத்துவர் ஆக வேண்டும் என்றும், ஒரு சிலர் வழக்கறிஞராக வேண்டும் என்றும், ஒரு சிலர் I.A.S, I.P.S -க்கு செல்ல வேண்டும் என்றும், ஒரு சிலர் கட்டுமானப் பொறியாளராக வேண்டும் என்றும் குறிக்கோள்களை நிர்ணயம் செய்துகொள்கின்றனர். இவர்கள் முதல் ரகம். இப்படி எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு degree -யை வாங்கிவிட்டு கிடைக்கும் வேலைக்கு செல்லலாம் என்று இருப்பார்கள். இவர்கள் இரண்டாம் ரகம்.
இந்த இரண்டாம் ரகத்தினருக்கு எந்தக் கவலையும் இல்லை. இவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில்தான் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க தொடங்குவார்கள். ஆனால் இந்த முதல் ரகத்தினர் இருக்கிறார்களே அவர்களுக்கு ஆரம்பமே சிக்கலாக இருக்கலாம். அவர்கள் தங்கள் குறிக்கோளை கனவு காண தொடங்கியிருப்பார்கள். அந்த கனவை எண்ணங்களாய் தங்களுள் விதைக்கத் தொடங்கியிருப்பார்கள். அந்த விதை விருக்ஷமாக வளர்ந்து கணிகளைத் தரும் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களின் இந்த எண்ண ஓட்டத்துக்கு பெற்றோர்கள் ஒத்து வரவேண்டுமல்லவா. இங்குதான் முதல் சிக்கல் தொடக்கம். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கென்று ஒரு கனவு வைத்திருப்பார்கள், அதன்படி திட்டங்களை வகுத்திருப்பார்கள். பெற்றோர்களின் கனவுகளுக்கும் பிள்ளைகளின் கனவுகளுக்கும் நிகழும் அந்த மனப்போராட்டமே அந்த பிள்ளைகளின் எதிர் காலத்தை தீர்மானிக்கிறது. பெற்றோர்களின் சம்மதத்தோடு பலர் தங்களின் கனவுகளை நோக்கி நடைபோட தொடங்கிவிடுகின்றனர். பலர் தங்களின் பெற்றோர்களின் வற்புறுத்தல்களுக்கு இணங்கி கனவுகளை சிதைத்து, அவர்களின் ஆசையா நிறைவேற்ற கல்லூரி படிப்பை தொடங்க செல்கின்றனர்.
நான் மேலே சொன்ன இரண்டு ரக இளைஞர்களுக்கு எதிர்மறையான இன்னொரு ரகம் உண்டு. எதற்காகவும், யாருக்காகவும் தங்களின் கனவுகளையும், குறிக்கோளையும் விட்டுக்கொடுக்காதவர்கள். பெற்றோர்களிடம் சண்டையிட்டு தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ள முற்ப்படுபவர்கள். ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றாலும், ஏதேனும் ரூபத்தில் சவால்களை சந்திக்க விருப்பமுள்ளவர்கள். இவர்கள் வாழ்க்கையில் எடுக்கும் முக்கிய முடிவுகள் விமர்சனத்திருக்குள்ளாகும்; ஏளனம் செய்யப்படும். இவர்கள் எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக சிந்தித்து, பல கோணங்களில் யோசித்து, தொலைநோக்கு பார்வையுடன் எடுப்பவர்கள். தங்களின் கனவுகை அடைய எத்தனைக் கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள தயாராக உள்ளவர்கள். குடும்பம், பெற்றோர்கள், மனைவி, காதலி, நண்பர்கள் என யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளாமல், தங்களின் உண்மை இயல்புடன் இருப்பவர்கள். விக்ரம் - வேதா திரைப்படத்த்தில் விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் கதாப்பாத்திரமும் அப்படிதான். இந்த படத்தில் வில்லன் என்றோ ஹீரோ என்றோ சொல்லிவிட முடியாத அளவுக்கு ஒரு கதாப்பாத்திரம் வேதா. வேதாவின் லட்சியம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த பகுதியில் அவன் ஒரு பிரபலமாக, சொல்லப்போனால் ஒரு Godfather-ஆக இருக்க வேண்டும். அதற்கான வழிகளை ஏற்படுத்தி, யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் அதில் பயணம் செய்பவன். தன்னை நம்பி இருப்பவர்களுக்கு எதையும் செய்யும் இயல்பு என்று நிற்கிறது வேதாவின் கதாப்பாத்திரம். விக்ரமாக மாதவன். நேர்மையான போலீஸ் அதிகாரி. விக்ரமாக யார் வேண்டுமானாலும் இருந்து விடலாம். ஆனால் வேதவாக இருப்பது அனைவருக்கும் அமைந்துவிடாது.
கனவுகளைத் துறத்துவதாக நாம் நினைத்து செய்துகொண்டிருக்கும் பயணத்தின் ஒரு கட்டத்தில்தான் அதற்கான முதல் அடியைக்கூட நாம் இன்னும் எடுத்துவைக்கவில்லை என்பதை உணர்கிறோம். அந்த விழிப்பை அடையும் போது நாம் எங்கே சென்று நிற்போம் என்று பார்த்தால், ஒரு சாதாரணனாக அன்றாடம் தேவைகளைப் பூர்த்தி செய்ய அலைந்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவனாக நின்றுகொண்டிருப்போம். இதனை நாம் உணரும் போது, நமது கனவு பயணத்திலிருந்து நாம் வெகு தூரம் விலகி சென்றிருப்போம். குடும்பம், மனைவி, குழந்தைகள் என வாழ்க்கை திசை மாறி இருக்கும். அனைத்தையும் ஒருங்கிணைத்து தமது கனவுகள் நோக்கி செல்பவர்கள் வெகு சிலரே. நம் கதையின் நாயகன் "வேதவாக" வாழ்வதற்கு ஒரு சிலருக்கே நேரம், காலம், சூழல் என அனைத்தும் வாய்ப்பளிக்கிறது. இப்படியாக நம்மில் பலர், பல காரணங்களுக்காகவும் நம்மேல் சுமத்தப்படும் பொறுப்புகளுக்காகவும் நமக்குள் இருக்கும் வேதாவை தொலைத்துவிட்டு அலைந்து கொண்டிருக்கிறோம்.
கனவுகளைத் துறத்துவதாக நாம் நினைத்து செய்துகொண்டிருக்கும் பயணத்தின் ஒரு கட்டத்தில்தான் அதற்கான முதல் அடியைக்கூட நாம் இன்னும் எடுத்துவைக்கவில்லை என்பதை உணர்கிறோம். அந்த விழிப்பை அடையும் போது நாம் எங்கே சென்று நிற்போம் என்று பார்த்தால், ஒரு சாதாரணனாக அன்றாடம் தேவைகளைப் பூர்த்தி செய்ய அலைந்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவனாக நின்றுகொண்டிருப்போம். இதனை நாம் உணரும் போது, நமது கனவு பயணத்திலிருந்து நாம் வெகு தூரம் விலகி சென்றிருப்போம். குடும்பம், மனைவி, குழந்தைகள் என வாழ்க்கை திசை மாறி இருக்கும். அனைத்தையும் ஒருங்கிணைத்து தமது கனவுகள் நோக்கி செல்பவர்கள் வெகு சிலரே. நம் கதையின் நாயகன் "வேதவாக" வாழ்வதற்கு ஒரு சிலருக்கே நேரம், காலம், சூழல் என அனைத்தும் வாய்ப்பளிக்கிறது. இப்படியாக நம்மில் பலர், பல காரணங்களுக்காகவும் நம்மேல் சுமத்தப்படும் பொறுப்புகளுக்காகவும் நமக்குள் இருக்கும் வேதாவை தொலைத்துவிட்டு அலைந்து கொண்டிருக்கிறோம்.