Tuesday, February 26, 2019

சின்னபரூர் ஸ்ரீ உமாதேவி உடன் அமர் ஸ்ரீ நடன புரீஸ்வரர்


கோயில்கள் கட்டி இருக்கிறார்கள் ? எங்கே கட்டி இருக்கிறார்கள்? இன்று நாம் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோமே, அதிலிருந்து 
பல மைல்கள் தள்ளி, உள்கிராமங்கிளில் கட்டி இருக்கிறார்கள். அந்த கோயில்களை சுற்றி மக்களை குடியமர்த்தி  இருக்கிறார்கள்.  அந்த கிராமங்களில் ஏன் காட்டினார்கள்? அப்படி அங்கே என்ன இருந்திருக்கக்கூடும்? ஒரு வேளை, ஒரு காலத்தில் அந்த கோயில்கள் அமைந்திருக்கும் கிராமங்களை இணைக்கும் சாலைகள் தான் முக்கிய வழித்தடங்களாக இருந்தனவா ? 


     கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் அருகே உள்ளது சின்ன பரூர் கிராமம். விருத்தாசலம் நகரில் இருந்து 12 கிலோமீட்டர். அந்த கிராமத்திலிருந்து   சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 16 கிலோமீட்டர்.  அக்கிராமத்தில் ஸ்ரீ உமாதேவி உடன் அமர் ஸ்ரீ நடன புரீஸ்வரர் திருக்கோயில் இருந்துள்ளது. கருங்கல் கோயிலாக இருந்திருக்க கூடும். குறைந்த பட்சம் ஒரு ஏக்கரில் அமைந்துள்ளது. கருங்கல் காம்பவுண்டு சுவர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அருகில் சிறு குளம் இருந்து இருக்கிறது. அந்த கோயில் பாழடைந்த பின்னர் செங்கல்லினால் கோயில் கட்டி இருக்கிறார்கள். அதுவும் சிதலமடைந்துள்ளது. 



தற்போது தகர கொட்டகைக்குள் ஆவுடையாரை தேவி சகிதம் குடும்பத்துடன் குடி  வைத்து உள்ளார்கள். கோயில் கட்டுவதற்கான பணிகள் நடப்பதாக தெரிகிறது. வேறு பணி காரணமாக அவ்வூருக்கு சென்றதால் யாரிடமும் பேச்சு கொடுத்து விவரம் பெற இயலவில்லை. 

  இன்று இறைவனையும், இறைவியையும் கண்டதால் பெரும்பேறு பெற்றேன். விரைவில் முழு தகவல்களுடன். "அந்த ஊருல ஒரு பழைய கோயில் இருக்கு, முடிஞ்சா அத போய் பாருங்க", என்று ஒரு வருடத்திற்கு முன் நமக்கு தகவல் தெரிவித்த நண்பர் அன்பு அரசன் அவர்களுக்கு நன்றி.







Chat Box