ஜார்ஜ் பெர்ணான்டஸ். இன்று Facebookல் அரசியல் பேசிவரும் பலரும் கேள்விப்பட்டிராத பெயர் இது. இந்திய இராணுவம் வீர சாகசம் புரிந்த கார்கில் போரின் போது பாதுகாப்புதுறை அமைச்சர் யார் கேட்டால் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காசுமீர் பிரச்சினைக்கு தீர்வு காண பல முறை பிரிவிணைவாத குழுக்களுடன் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியவர், இரயில்வே சங்கத் தலைவர்...பின்னாளில் இரயில்வே அமைச்சர், அரசியல் பிரவேசத்திற்கு முன்பே உலகின் பல்வேறு தொழிலாளர் மற்றும் மனித உரிமை சமூகங்களால் நன்கு அறியப்பட்டவர், இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனத்தின் போது மிகவும் தேடப்பட்ட குற்றவாளி...பின்பு சிறைவாசம்,
தொழிலாளர்களின் தோழன் என பன்முக சாதனையாளர் ஜார்ஜ் ஃர்ணான்டஸ். அவசர நிலைக்கு பிறகு நடைப்பெற்ற 1977 பொதுத்தேர்தலில் சிறையில் இருந்தபடியே, பிராச்சாரத்திற்கு கூட செல்லாமல் பீகார் மாநிலம் முசாபர்நகர் தொகுதியில் 3லட்சம் வாக்குகளில் வெற்றிப்பெற்று மத்திய அமைச்சரானார்.

1998ல் மத்திய பாஜக ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சாராக பதவியேற்றபின்பும் தனது ஈழ ஆதரவு நிலையில் மாறாமல் இருந்தார். 1998ல் ஈழப் போராளிகளுக்கு ஆயுதகங்களை எடுத்துச்சென்ற கப்பலை இந்திய கடற்படை ரோந்து கப்பல் தடுக்க முற்பட்ட போது, அம்முயற்சியை தடுத்து ஆயுதங்கள் தங்குத்தடையின்றி கிடைக்க வழி செய்தார் ஜார்ஜ் பெர்ணான்டஸ். இந்திய உள்துறை அமைச்சகம் தனி குழு அமைத்து இலங்கை வரை அனுப்பி இவரின் நடவடிக்கைகளை கண்காணித்தெல்லாம் பெருங்கதை. அன்றைய இலங்கை அரசு ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களை இலங்கை மக்களின் எதிரி என்றே விமர்சித்ததது. தமிழகம் மற்றம் ஈழத்தின் தலைமன்னார் பகுதிகளுக்கிடையே உள்ள பாக்கு ஜலசந்தயில் இந்திய கடற்படை ரோந்தை மிகவும் சிறுமைப்படுத்தி புலிகளின் முயற்சிகளுக்கு மறைமுகமாக உதவினார். இராஜீவ் கொலை வழக்கில் குற்றங்சாட்டப்பட்ட அனைவரின் வழக்குச்செலவு மற்றும் குடும்ப நலனுக்காக நிதி திரட்ட அமைக்கப்பெற்ற குழுவின் முக்கிய காரணியாக விளங்கினார்.
தமிழீழ செய்திதாளான தினமுரசும், வானோலி புலிகளின் குரலும் இவரை பலமுறை இரும்பு மனிதர் என்று பாராட்டியுள்ளன. சுப்பிரமணிய சுவாமி அன்றைய குடியரசுத் தலைவர் நாராயணன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் "பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஒரு "National security risk". அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்", என கோரிக்கை விடுத்தார்.
இப்படியாக பல்வேறு ஏதிர்ப்புகளுக்கும், விமர்சகர்களுக்கும் செவிசாய்க்காமல் தன் ஈழ ஆதரவு நிலைப்பாடில் உறுதியாக இருந்தார். பழ.நெடுமாறன், வைகோ, டாக்டர்.இராமதாஸ் உள்ளிட்ட தமிழ் ஆதரவு தலைவர்களுடன் மிகுந்த நட்பு பாராட்டியவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள்.
நம் தமிழ் மண்ணுக்கும், கலாச்சாரத்திற்கும் சிறிதளவு சம்பந்தமுமின்றி ஈழ மக்களுக்காக குரல் கொடுத்தவரை அய்யா ஆண்டன் பாலசிங்கம் அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க இயலவில்லை. ஜார்ஜ் பெர்ணான்டஸ் பிறந்த தினமான இன்று பிறந்த ஈழ துரோகிக்கு வைர விழா எடுக்கும் நிகழ்வு வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறது.